உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடுகளில் வரலட்சுமி பூஜை; பெண்கள் நோன்பு கயிறு கட்டி வழிபாடு செய்தனர்

வீடுகளில் வரலட்சுமி பூஜை; பெண்கள் நோன்பு கயிறு கட்டி வழிபாடு செய்தனர்

மதுரை; மகாலட்சுமி எழுந்தருளிய கோயில்களில் வரலட்சுமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பரவலாக வீடுகளிலும் பெண்கள் வரலட்சுமி பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பூஜை நடைபெறும். அதன்படி இன்று வரலட்சுமி விரதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், உலக நன்மைக்காகவும் வரலட்சுமி நோன்பு வழிபாட்டை மேற்கொண்டனர். பெருமாள் கோவில், அம்மன் கோவில் மற்றும் வீடுகளில் வரலட்சுமி பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். விரதம் இருந்து வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களுக்கு, வழிபாட்டுக்கு பின் புதுத்துணி, வளையல், குங்குமம், பூ மற்றும் நோன்பு கயறு (மஞ்சள் கயறு) வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு கோவில்களில் பிரசாதமும், வீடுகளில் வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களுக்கு விரதத்தை நிவர்த்தி செய்ய, பிரசாதத்துடன் உணவும் வழங்கி கொண்டாடினர். கோயில்களில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !