உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமரை நிலவின் பெயரோடு சேர்த்து ராமச்சந்திரமூர்த்தி என்பது ஏன்?

ஸ்ரீராமரை நிலவின் பெயரோடு சேர்த்து ராமச்சந்திரமூர்த்தி என்பது ஏன்?

மகாவிஷ்ணு சூரிய வம்சத்தில் ராமனாக அவதரித்தார். இதையறிந்த சந்திரன்,  சூரியனைப்  பெருமைப்படுத்தியது போல, தன்னையும் பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை விஷ்ணுவிடம் தெரிவித்தார். ராமன், தன் பெயரோடு  சந்திரன் என்பதையும் சேர்த்துக் கொண்டார். அவரை  ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி என்றே குறிப்பிடுவர்.  அதோடு மட்டுமில்லாமல், அடுத்து கிருஷ்ணராக சந்திர குலத்தில் அவதரிப்பதாகவும் உறுதியளித்தார். ராமச்சந்திரன் என்ற சொல்லுக்கு பக்தர்கள் மீது நிலவைப்போல குளிர்ச்சியாக அருளைப் பொழிபவன் என்ற பொருளும் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !