உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் அம்மன் கோயில்களில் வரலட்சுமி பூஜை

கூடலுார் அம்மன் கோயில்களில் வரலட்சுமி பூஜை

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தினர். அம்மன் குறித்த பஜனை பாடல்களை பாடினர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்களுக்கு தாலி கயிறு, வளையல், குங்குமம் வழங்கப்பட்டது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் பாதயாத்திரையாக வந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !