உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயணசாமி கோயிலில் சுமங்கலி பூஜை; ஏராளமான பெண்கள் வழிபாடு

நாராயணசாமி கோயிலில் சுமங்கலி பூஜை; ஏராளமான பெண்கள் வழிபாடு

கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயணசாமி கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் பத்திரகாளியம்மன், நாராயணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பத்திரகாளி அம்மன் சன்னதி முன்பாக வரிசையாக அமர்ந்த பெண்கள் கணபதி, லட்சுமி ஸ்தோத்திரங்களை பாடினர். பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பூல தட்டு, ஜாக்கெட் பிட், வளையல் உள்ளிட்ட பிரசாத தொகுப்புகள் வழங்கப்பட்டது. குங்கும அர்ச்சனை, நாமாவளி, பஜனை உள்ளிட்டவைகளை பாடி பூஜை செய்தனர். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.

* கீழக்கரை கோகுலம் நகரில் உள்ள பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கணேசன், மாசாணம் அம்மாள் ஆகியோர் பூஜைகளை நடத்தினர். கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்கரை கோகுலம் நகர் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !