உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதம் ; பெண்கள் வழிபாடு

செஞ்சி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதம் ; பெண்கள் வழிபாடு

செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டனர்.

மகாலட்சுமியின் அருளை பெருவதற்காக கடைபிடிக்கப்படும் விரதங்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம். அம்மன் வழிபாட்டிற்குரிய விரதங்கள் ஆடி மாதத்தில் வரும். ஆனால் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பெளர்ணமிகள் வந்தால் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வரும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்ததால் ஆவணி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கொண்டாடினர். இந்த நாளில் விரதம் இருப்பதால் நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம், செல்வ வளம், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். தீமைகள் நீங்கி குடும்பம் செழிக்கும், மன அமைதி கிடைக்கும். இதை முன்னிட்டு இன்று செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே்கம், அலங்காரம் செய்தனர். காலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து வரலட்சுமி விரதம் கடை பிடித்த ஏராளமான பெண்கள் பழங்களை வைத்து விரதம் இருந்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !