உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி கோவில்களில் எம்.பி.க்கள் குழு தரிசனம்

கன்னியாகுமரி கோவில்களில் எம்.பி.க்கள் குழு தரிசனம்

கன்னியாகுமரி: பார்லி., நிலைக்குழுவின் தலைவர் ராஜேந்திர அகர்வால் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவில் எம்.பி.க்கள் ரமேஷ் சந்திரகவுசிக், கவுஸ்லேந்திரகுமார், காஜேன் முர்மு மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம்  கடற்கரையின் கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். கோ வளம் சூரிய அஸ்தமனம் கடற்கரை பகுதிக்கு சென்றனர். மாலையில் கடலில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர்  குழுவினர் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !