இழந்த செல்வம் கிடைத்தது
ADDED :1080 days ago
சவுராஷ்டிர தேசத்தின் மகாராணியான சுசந்திராவிடம் ஏராளமான செல்வம் இருந்தது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விட தானே பெரியவள் என செருக்குடன் செயல்பட்டாள். அதை போக்க எண்ணிய மகாலட்சுமி அவளை ஏழையாக்கினாள். சுசந்திராவின் மகளான சாருமதி தன் தாயின் நிலை கண்டு வருந்தி வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டாள். சுசந்திராவும் அதில் பங்கேற்றாள். கருணைக்கடலான மகாலட்சுமி மனம் இரங்கி இழந்ததை மீண்டும் வழங்கினாள்.