பூட்டை ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் கஞ்சி களஞ்சியம் ஊர்வலம்
ADDED :830 days ago
மூங்கில்துறைப்பட்டு: சங்கராபுரம் அடுத்த பூட்டை ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் கஞ்சி களஞ்சியம் நிகழ்ச்சி நடந்தது. பூட்டை ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் நேற்று காலை அம்மன் சொற்பொழிவு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பரதநாட்டியம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. மதியம் கஞ்சி களஞ்சியம் நிகழ்ச்சியில் பக்தர்கள் முளைப்பாரி, தென்னம்பூ, கனிகள், காய்கள், ஆபரணங்கள், பலகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு கரங்களையும் கஞ்சி மற்றும் அக்னி குடங்களை தூக்கிக் கொண்டும் பக்தர்கள் சாமி வேடம் அணிந்தும் ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் பூட்டை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை வழிபட்டனர்.