உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ பூஜை; நந்தியம் பெருமானுக்கு குடம், குடமாக அபிஷேகம்

தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ பூஜை; நந்தியம் பெருமானுக்கு குடம், குடமாக அபிஷேகம்

தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளாமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சோமவார நாளான திங்கள்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் வலிமையும், வளம் அருளும் பிரதோஷமாக விளங்குவதாக கருதப்படுகிறது. அப்படியாக, தஞ்சாவூர் பெரியகோவிலில் இன்று மாலை நடந்த பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம்,திரவியப்பொடி, விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால் குடம், குடமாக அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !