திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம்
ADDED :829 days ago
திருவனந்தபுரம்: கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இன்று ஓணம் பண்டிகை நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு, வாழைமரங்களை கட்டி வீடுகளை அலங்கரித்து ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே ஓணம் பண்டிகையையொட்டி கேரளா கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் முன்பாக இடப்பட்டிருந்த பிரமாண்ட அத்தப்பூக்கோலம் அனைவரையும் கவர்ந்தது.