உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோயிலில் ரஜினி; தன் இஷ்ட தெய்வத்தை வழிபட்டார்

ராகவேந்திரர் கோயிலில் ரஜினி; தன் இஷ்ட தெய்வத்தை வழிபட்டார்

ஹைதராபாத்: கர்நாடக-ஆந்திர எல்லையிலுள்ள, மந்திராலயாவிலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

ராகவேந்திர சுவாமி மீது அதீத பக்தி கொண்டவர் ரஜினி. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலுக்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தார். முன்னதாக, கோயிலில் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் வழிபட்ட அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயில் மடாதிபதியை சந்தித்த ரஜினி, அவரிடம் ஆசிபெற்றார். ரஜினியின் திடீர் வருகையால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !