/
கோயில்கள் செய்திகள் / கடலின் பின்னணியில் பிரமாண்ட 58 அடி உயர கங்காதரேஸ்வரர்; தரிசிக்க குவிந்த பக்தர்கள்
கடலின் பின்னணியில் பிரமாண்ட 58 அடி உயர கங்காதரேஸ்வரர்; தரிசிக்க குவிந்த பக்தர்கள்
ADDED :829 days ago
திருவனந்தபுரம்; ஆழிமலை கங்காதரேஸ்வரர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருவனந்தபுரம் ஆழிமலையில் கடலின் பின்னணியில் 58 அடி உயரமுள்ள சிவபெருமானின் மாபெரும் சிற்பத்துடன் அமைந்துள்ளது கங்காதரேஸ்வரர் கோவில். இங்கு சிவன் கங்காதேவியை தலையில் தாங்கியவாறு காட்சியளிப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பாகும். சிற்பம் அமைந்துள்ள பாறையின் அடியில், 3500 சதுர அடி பரப்பளவில் குகையில் தியான மண்டபம் உள்ளது. சிறப்பு மிக்க இக்கோயிலில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.