உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில் விழா; தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அம்மன் கோவில் விழா; தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆயக்குடி; பழநி ஆயக்குடி வீரலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழநி புது ஆயக்குடி வீரலட்சுமி அம்மன் கோயில் திருவிழா ஆக.15 முதல் நடைபெற்று வருகிறது. ஆரிய குல பங்காளிகளின் குல தெய்வமான வீரலட்சுமி அம்மன் கோவிலில் 15 வது நாள் திருவிழாவில், ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. கோயில் கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆண்கள், பெண்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !