அம்மன் கோயிலில் நள்ளிரவில் நடந்த பவுர்ணமி பூஜை; 18 வகையான அபிஷேகம்
ADDED :1076 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோவிலில் நள்ளிரவில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் துதி பாடல்கள் பாடப்பட்டு மூலவருக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. பெண்கள் கோயிலின் முன்பு கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.