மலையே சிவன்; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ADDED :827 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையிலுள்ள மலையையே, பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையார் மலையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். இதில், ஆவணி மாத பவுர்ணமி திதி நேற்று காலை 10:46 மணி முதல், இன்று காலை, 8:17 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால், நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், அருணாசலேஸ்வரர் கோவிலில், 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.