திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய விழா
ADDED :739 days ago
சோழவந்தான்: திருவேடகம் ஏலவார் குழலியம்மன் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது. நேற்று இரவு கோயிலில் இருந்து விநாயகர், திருஞானசம்பந்தர், குலைச்சிறை நாயனார் வெண்குதிரையில் பவனி வந்து வைகையில் எழுந்தருளினர். பின் ஆற்றில் தங்கத்தால் செய்த திருப்பாசுர ஏட்டை சப்பரத்தில் வைத்து ஓதுவார் மூர்த்தி, சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க ஏடு எதிரேறும் விழா நடந்தது. தமிழகத்தில் இங்கு மட்டுமே இவ்விழா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் சேவுகன், பிரதோஷ கமிட்டி தேவகுமார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.