உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை மெரினா கடற்கரையில் மண்ணில் புதைந்திருந்த கற்சிலை கண்டெடுப்பு

சென்னை மெரினா கடற்கரையில் மண்ணில் புதைந்திருந்த கற்சிலை கண்டெடுப்பு

சென்னை:  மெரினா கடற்கரையில் ஒரு அடி உயரம் உள்ள, மண்ணில் புதைந்திருந்த கற்சிலை ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கண்டெடுத்துள்ளனர். பின், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மெரினா காவல்துறையினரிடம் அந்த கற்சிலையை ஒப்படைத்தனர். இந்த சிலை எப்படி வந்தது, யாரும் புதைத்து வைத்தார்களா என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !