உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘இஸ்ரோ’வுக்கு பாராட்டு ; கருப்பராயன் கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

‘இஸ்ரோ’வுக்கு பாராட்டு ; கருப்பராயன் கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு

மேட்டுப்பாளையம்; ‘சந்திரயான்–- 3’ விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து, ‘இஸ்ரோ’வுக்கு பாராட்டு தெரிவித்து, எல்லை கருப்பராயன் கோவிலில், 1,008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னிபாளையத்தில், எல்லை கருப்பராயன் கோவிலில், ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழா நடந்தது. பல வண்ணங்களில் கோலமிட்டு,1,008தீபங்கள் ஏற்றப்பட்டன. 108 ஆன்மிக பெரியவர்கள், 108 துாய்மை பணியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், 108 அடி நீளம் கொண்ட தேசியக்கொடியை மக்கள் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவை , ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் தேன்கூடு அமைப்பினர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !