சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED :827 days ago
சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் நேற்று மாலை ஆவணித்தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சுவாமிக்கு ஆவணி மாத திருவிழா நடந்து வருகிறது. 9ம் விழாவான நேற்று மாலை 5.30 மணிக்கு தேவேந்திரன் தேரில் தம்பதி சமே தராக பெருமாள் சுவாமி எழுந்தருளினார். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். குழந்தைகளும், பெரியவர்களும் கோவிந்தா கோபாலா, என்ற கோஷத்துடன் தேரை இழுத்து நிலைக்கு கொண்டு வந்தனர். இரவு 7மணிக்கு கருடவாகன பவனியும், 10 மணிக்கு ஆராட்டும் நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.