புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா
ADDED :827 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில், 36 ஆராதனை விழா துவங்கியது. புவனகிரியில் ராகவேந்திரர் பிறந்த அவதார இல்லம் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் அவரது இல்லத்தில் ஆராதனை விழா சிறப்பாக நடத்தி வருகின்றனர். 36 வது ஆராதனை விழா, நேற்று காலை அபூர்வ ஆராதனையுடன் விழா துவங்கியது. சுவேத நதி தீர்த்தத்துடன், மந்தராலய மரபின்படி பல்வேறு பூஜைகள் நடந்தது. மதியம் அபிஷேக, அலங்காரத்துடன், தீப ஆராதனைக்குப்பின் அன்னதானம் வழங்கினர். இன்று (1ம் தேதி) மத்திய ஆராதனை, நாளை (2ம் தேதி) உத்தர ஆராதனை நடக்கிறது. மூன்று நாட்களும் அதிகாலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், வேத பாராயணம் மாலையில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.