ஆவணி சனி; சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1084 days ago
கோவை; சாய்பாபா காலனியில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.