உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதித்யா எல்1 வெற்றிக்கு வாரணாசியில் சிறப்பு ஹோமம் ; தேசிய கொடி வைத்து பூஜை

ஆதித்யா எல்1 வெற்றிக்கு வாரணாசியில் சிறப்பு ஹோமம் ; தேசிய கொடி வைத்து பூஜை

வாரணாசி; இன்று ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக பாய தயார் நிலையில் உள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று செப்.,2ல் காலை 11:50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் பாய உள்ளது. அதற்கான கவுன்ட்டவுன் நேற்று (செப்.,1) துவங்கியது. இன்று பாயும் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றி அடைய வாரணாசியில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பூஜையில் ஹோம குண்டம் அமைத்து பூஜை, தேசிய கொடி ஏந்தி வழிபாடு நடைபெற்றது. ஆதித்யா எல்1 வெற்றிக்காக ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !