உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 64 ஆண்டுகளுக்கு பிறகு கொற்கை வீரட்டேஸ்வரர் கும்பாபிஷேகம் கோலாகலம்

64 ஆண்டுகளுக்கு பிறகு கொற்கை வீரட்டேஸ்வரர் கும்பாபிஷேகம் கோலாகலம்

மயிலாடுதுறை : கொற்கை வீரட்டேஸ்வரர் கோவில்  கும்பாபிஷேகம் 64 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை  கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற பழமையான வீரட்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது அட்ட வீரட்ட தளங்களில் ஒன்றான இத்தலத்தில்  சிவபெருமான் மீது  மன்மதன் மலர்  கனைகளை தொடுத்த போது அவனை சுவாமி நெற்றிக் கண்களால் எரித்து மீண்டும் உயிர்பித்த தலம். இந்த கோயிலின் மகா கும்பாபிஷேகம் 64 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை நடைபெற்றது இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 31ம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றது.  இன்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானத்தை அடைந்தது  காலை 9:40 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், மதுரை ஆதீனம்,  வேலாக்குறிச்சி ஆதீனம், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள்  போக்குவரத்து வழிகள்  ஏற்பாடு செய்யப்படாததால் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !