உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அஸ்வதி பொங்கல் விழா; சுமங்கலி பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அஸ்வதி பொங்கல் விழா; சுமங்கலி பூஜை

மணவாளக்குறிச்சி; மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று மாலை சுமங்கலி பூஜை நடந்தது. இதனை ஹோமம், 6 மணிக்கு உற்சவ தந்திரி சங்கர நாராயணன், மேல் சாந்தி பகவதி குருக்கள் ஆகியோர் பூஜையை நடத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதற்காக ரூ.500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு சில்வர் தட்டு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, தேங்காய், அரவணை பாயாசம், சேலை, மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடந்தன. இன்று காலை 7மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜமேளம், 11.30 மணிக்கு 7001 பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பெண்கள் குவிந்து பொங்கலிடுவார்கள். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, குமாரகோவில் உள் ளிட்ட பகுதிகளிலி ருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், மதியம் 1 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்க ரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு, இரவு 8 அத்தாழ பூஜையுடன் ஆவணி அசுவதி பொங்கல் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !