50 கிலோ வெண்ணை அலங்காரத்தில் கிருஷ்ணராக அருள்பாலித்த வெங்கடாஜலபதி
ADDED :822 days ago
கோவை ; கொடிசியா திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் 50 கிலோ வெண்ணை அலங்காரத்துடன் துவாரகாபுரி கிருஷ்ணராக ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.