உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்; குழந்தை கிருஷ்ணருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்; குழந்தை கிருஷ்ணருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

பெரியகுளம்: பெரியகுளம் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.

பெரியகுளம் கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உறியடி விழா நடந்தது. 


நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திருமஞ்சனம், சத்சங்கம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. கிருஷ்ணர், ராதை அலங்காரம் செய்து வந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மலர் அலங்காரத்தில் கிருஷ்ணர், ராதை காட்சியளித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் பூக்களால் கிருஷ்ணரை அலங்கரித்தனர். லட்சுமிபுரம் முக்கிய வீதிகளில் கிருஷ்ணர், ராதை வீதி உலா நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் ராமானுஜர் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் உட்பட தாலுகா பகுதிகளில் வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, தங்களது வீட்டு குழந்தைகளை அதில் நடக்க வைத்து ரசித்து, மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !