நந்தவன கல்யாண முருகன் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :821 days ago
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி நந்தவன கல்யாண முருகன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. 16 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது. தீப ஆராதனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.