திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு கண்ணன் அலங்காரம்
ADDED :818 days ago
பண்ருட்டி; பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு உற்சவர் பெருமாள் வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு, மாலை உற்சவர் சரநாராயண பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று மாலை 6.00 மணியளவில் உற்சவர் சரநாராயண பெருமாள் வெண்ணை தாழி கண்ணன் அலங்காரத்தில் உறியடி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.