உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரநாடு மகாகணேசர் கோயிலில் அக்.28ல் கும்பாபிஷேகம்

மாரநாடு மகாகணேசர் கோயிலில் அக்.28ல் கும்பாபிஷேகம்

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகிலுள்ள மாரநாடு மகாகணேசர், பாலகணேசர் கோயில் கும்பாபிஷேகம் அக்.28ல் நடக்கிறது. நூறு ஆண்டுக்கு முன் இப்பகுதியில் ஏற்பட்ட பஞ்சம் நீங்க மகாகணேசர் கோயில் கட்டப்பட்டது. இங்கிருக்கும் பாலகணேசர், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளால் வழிபாடு செய்யப்பட்டவர். கும்பாபிஷேகத்தை ஒட்டி, அக்.27 காலை 7 முதல் 11வரை விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. மாலை5 முதல் இரவு10 வரை பூர்வாங்க பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை, யந்திரஸ்தாபனம், விக்ரஹ பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் நடத்தப்படுகிறது. அக்28 காலை7.15 முதல் 9.55க்குள் இரண்டாம் காலயாகசாலை பூஜை, கோபூஜை, நாடி சந்தானம், மகாபூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. காலை10.05 முதல் 10.29 மணிக்குள் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது. கொடுமலூர் நவநீதகிருஷ்ண குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !