மேலும் செய்திகள்
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4715 days ago
கூடலூரில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை
4715 days ago
சேலம்: சேலம் மாவட்டம், அரியானூர் கஞ்சமலை கருங்காட்டில் உள்ள தசவதார பெருமாள் கோவிலில் நாளை 31ம் ஆண்டு உற்சவ விழா, 77 அடி உயர ஆஞ்சநேயருக்கு நாளை நான்காம் ஆண்டு உற்சவ விழாவும், திருக்கோடி தீபம் ஆகியன நடக்கிறது. விழாவை முன்னிட்டு, தசவதார பெருமாள் கோவிலில், கால பைரவர் உட்பட அஷ்ட பைரவர்களின் புதிய உருவ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.பெருமாள், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை காலை முதல், இரவு வரை, அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி கிருஷ்ணன், ஸ்தாபகர் சந்திரபிரகாசம் பிரம்மச்சாரியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
4715 days ago
4715 days ago