பழஞ்சிறை தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :1071 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே பழஞ்சிறையில் உள்ள தர்ம முனிஸ்வரர் கோயிலில் புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு செப்.,8 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் மூலவர் தர்ம முனீஸ்வரர், காளியம்மன், ராக்காச்சி அம்மன், கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. யாக வேள்வி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் மற்றும் பழஞ்சிறை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.