உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்

கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்

சூலூர்; கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீ னிவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா இரண்டு நாட்கள் நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை, விஸ்வரூப தரிசனம் மற்றும் கோ பூஜையுடன் உற்சவ விழா துவங்கியது. நவ கலச திருமஞ்சனம், திருவாராதனத்துடன் காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து, 9:15 மணிக்கு பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அலங்கார பூஜைக்குப்பின் அன்னதானம் நடந்தது. மாலை, உறியடி உற்சவம் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நடந்தது. இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாம சங்கீர்த்தனதுதடன் பெருமாள் திருவீதி உலா நடந்தது. சாற்று முறை பூஜைக்கு பின் சயன பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !