உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரி விட்டல் மந்திர் வேத குருகுலத்தில் திருக்கல்யாணம்

விளாச்சேரி விட்டல் மந்திர் வேத குருகுலத்தில் திருக்கல்யாணம்

திருநகர்: மதுரை விளாச்சேரி ஸ்ரீசைதன்ய விட்டல் மந்திர் வேத குருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி நிறைவு விழாவை முன்னிட்டு ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இன்று காலையில் சுப்ரபாதம், ஹோமம் முடிந்து மூலவர்கள் முன்பு உற்சவர்கள் திருக்கல்யாண அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாதஸ்வரம், வயலின் இசை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !