உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று சனிக்கிழமை சாஸ்திரப்படி சனீஸ்வர அபிஷேகம் நடந்தது.  சனீஸ்வர அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனிபகவானின் அருள் வேண்டி தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். சனி தோஷம் நீங்க ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் சனீஸ்வர அபிஷேக சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  கோயிலில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதியில் கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் தலைமையில் கலச ஸ்தாபன பூஜை செய்து வைதீக முறைப்படி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.  வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு நல் எண்ணெய் கொண்டு சிறப்பு அபிஷேகமும், கலச நீரால் அபிஷேகம் சாஸ்திர முறைப்படியும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு(சனீஸ்வரருக்கு) (தெய்வீகமாக) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீம் தூப நெய் வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த அபிஷேக சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட சனீஸ்வரரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !