உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் தங்க கருட வாகனத்தில் வேணுகோபாலன் அருள்பாளிப்பு

உலகளந்த பெருமாள் கோவிலில் தங்க கருட வாகனத்தில் வேணுகோபாலன் அருள்பாளிப்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று வேணுகோபாலன் தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 5ம் நாளான இன்று காலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு வேணுகோபாலன் மோகனா அலங்காரத்தில் தங்க பள்ளத்தில் வீதி உலா, 11:00 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு விசேஷ திருமஞ்சனம், சேவை, சாற்றுமறை நடந்தது. இரவு 8:00 மணிக்கு வேணுகோபாலன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வானவேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !