தங்க தகடுகளால் ஜொலிக்கும் கோரக்க சித்தர் கோயில்
ADDED :814 days ago
நாகப்பட்டினம்; நாகை அடுத்த வடக்கு பொய்கைநல்லுாரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோரக்க சித்தர் கோயில். இங்கு, கிழக்கு நோக்கி சித்தர் கோரக்கரின் ஜீவசமாதி பீடம் உள்ளது. 18 சித்தர்களில் முதன்மை சித்தரான கோரக்கர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி விழா, விமரிசையாக நடைபெறும். இக்கோயில் கருவறை சன்னிதி மற்றும் கொடிமரம், கோவையை சேர்ந்த மணிமோகன் - ராதா தம்பதியால், 40 லட்சம் ரூபாய் செலவில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி கோயில் நிர்வாக அறங்கா வலரும் முன்னாள் அமைச்சருமான ஜீவானந்தம் முன்னிலையில் நடந்தது. திரளான சாதுக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.