உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டி,-சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவிலில் நேற்று முன்தினம் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 10:00 மணிக்கு சக்கரத்தாழ்வார், கொடிப்படம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்தது. மூலவர் சன்னிதி முன் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர். காலை, 11:15 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மாலை சுவாமிக்கு காப்பு கட்டி, அபிேஷகம் நடந்தது. இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இன்று முதல் தினமும் காலை வெள்ளிகேடகம், இரவு பல்வேறு வாகனங்களில் விநாயகர் வீதி உலா வருவார். செப்., 15ல் கஜமுக சூரசம்ஹாரம், செப்., 18ல் மாலை தேரோட்டம், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார். செப்., 19ல் காலை கோவில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடக்கும். மதியம், 2:00 மணிக்கு விநாயகருக்கு முக்கூறுணி மோதகம் படையல் நடக்கும். இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !