அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் புனித நீரால் சூரியனுக்கு அபிஷேகம்
ADDED :814 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் சூரிய பகவானுக்கு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அபிஷேகங்கள், ஆராதனை நடந்தது. புனித நீரால் சூரியனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரங்கள் நடந்தது. பின்னர் பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், கோயில் டிரஸ்டி ராஜரத்தினம், நிர்வாகிகள் செய்தனர்.