உலகத்தை விழித்தெழ வைத்த பாரத சனாதன தர்ம முழக்கம்; தேவை எழுந்தால்... லட்சம் விவேகானந்தர்கள் தோன்றுவார்கள்!
அமெரிக்காவின் சிகாகோவில், 1893 செப்டம்பர் 11ல், முதலாவது உலக மதங்கள் மாநாடு நடந்தது. அதில். பாரதப் பிரதிநிதியாகச் சென்றிருந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் உரை, பாரத சனாதன தர்மத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து, ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் சனாதன தர்மத்தின் மீது குவிய வைத்தது. சகோதர சகோதரிகளே என்ற சுவாமிஜி உரையின் துவக்க வார்த்தைகளே, சனாதன தர்ம சாராம்சத்தை உரக்க முழங்கியது. இதை உணர்ந்து கொண்ட கூட்டம். கரகோஷம் எழுப்பி வாழ்த்தொலி எழுப்பியது.
சுவாமிஜியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த உரை:
சகோதர சகோதரிகளே,உங்களின் அன்பான வரவேற்புக்கு என் இதயம் கனிந்த நன்றி. உலகின் மிகப் பழமையான துறவிகள் சங்கத்தின் சார்பாக, அனைத்து மதங்களின் தாயான இந்து மதம் சார்பாக, கோடிக்க ணக்கான இந்துக்களின் சார்பாக நன்றி கூறுகிறேன்.
கீழை நாடுகளில் இருந்து வந்துள்ள நாங்கள், வெவ்வேறு நாடுகளுக்கு சகிப்புத் தன்மையின் கருத்தாக்கத்தை எடுத்துச் செல்வதற்கான மரியாதையை நியாயமாகப் பெறலாம் என்று, இங்கு பேசிய சிலர் குறிப்பிட்டனர். அவர்களுக்கும் நன்றி. சகிப்புத்தன்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை உலகுக்கு கற்பித்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதில், நான் பெருமிதம் கொள்கிறேன். நாங்கள் உலகளாவிய சகிப்புத்தன்மையை மட்டுமல்லாது, அனைத்து மதங்களையும் உண்மை என்றும் ஏற்றுக்கொள்கிறோம். கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்ட, அக திகளாக்கப்பட்ட, அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களக்கும் அடைக்கலம் அளித்த அரவணைத்த தேசத்தைச் சேர்ந்தவன் என் பதில், நான் பெருமிதம் கொள்கிறேன்.
இஸ்ரேலியரின் புனித வழிபாட்டுத்தலம் ரோமானிய சர்வாதிகாரத்தால் தூள் துாளாகத் தகர்க்கப்பட்ட அதே ஆண்டில், அந்த கொடூரங்களில் எஞ்சிய இஸ்ரேலியர்கள், எங்கள் தென்னிந்தியாவில் அடைக்கலம் புகுந்தபோது, அவர்களை அன்புடன் அரவணைத்த தேசத்தைச் சேர்ந்தவள் என்பதை, பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறேன். மகத்தான ஜொராஷ்டிரிய (பாரசீகம்/ ஈரான்) தேசத்தின் எஞ்சியிருக்கும் (பார்ஸி) கலாச்சாரத்துக்கு அடைக்கலம் அளித்து, இன்றளவும் அதை வளர்த்துக் கொண்டிருக்கும் மதத்தைச் சேர்ந்தவன் என்பதில், நான் பெருமிதம் கொள்கிறேன்.
சகோதர சகோதரிகளே! எனது இளம்பருவத்தில் இருந்தே, ஒரு கீதத்தை தினமும் நான் பாடிக்கொண்டிருக்கிறேன். அது, கோடிக்கணக்கான மக்களால் தினமும் பாடப்படும் கீதம். அதில் இருந்து சில வரிகளைக் கூறுகிறேன் : "வெவ்வேறு நீரோடைகள், வெவ்வேறு பாதைகளில் இருந்து தங்கள் ஆதாரங்களைப் பெறுகின்றன. அதுபோல், மக்கள் வெவ் வேறு உணர்வுகளால், வெவ்வேறு வழிக ளைப் பின்பற்றுகின்றனர். அவை பல்வேறு வடிவங்களில் தோன்றினாலும், வளைந்து சென்றாலும், நேராகச் சென்றாலும், அவை ன் புனித வழிபாட்டுத்த தெய்வத்தை நோக்கியே செல்கின்றன!". இதுவரை நடந்த மிக உன்னதமான மாநாடுகளில் ஒன்றான இந்த மாநாடு, ஸ்ரீமத் பகவத்கீதை அருளியிருக்கும் அற்பு தமான இந்த கொள்கையை உலகத்துக்குப் பிரகடனம் செய்கிறது, : எந்த ஒரு பக்தரும், எந்த ஒரு வடிவில் என்னிடம் வந்தாலும், நான் அவரை அடைகிறேன்; அனைவரும் வெவ்வேறு பாதைகளில் சிரமத்துடன் பய ணிக்கின்றனர். அனைத்து பாதைகளும், இறுதியில் என்ளையே அடைகின்றன!".
அழகான இந்த உலகை, பிரிவினைவாதம், மத அவமதிப்பு மற்றும் அதன் விளைவான வெறித்தனம் ஆகியவை, நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ளன. அப்படிப்பட்ட மோச மான வழிகளைப் பின்பற்றுபவர்கள், அடிக் கடி இந்த உலகை வன்முறைகளில் நிரப்பி, மனித ரத்தத்தில் ஊற வைத்து, நாகரிகத்தை அழித்து, ஒட்டுமொத்த தேசங்களையும் அவநம்பிக்கையில் மூழ்கடிக்கின்றனர். இந்த பயங்கர அரக் கர்கள் இல்லாவிட் டால், மனித சமு தாயம் இப்போது இருப்பதை விட அமோகமாக முன் னேறியிருக்கும். இப்போது, அவர் களின் காலம் முடிந்துவிட்டது. இந்த மாநாட்டைக் கவுரவிக்கும் வகையில் இன்று காலை ஒலித்த மணி, அனைத்து வெறித்தனங்களின், ஆயுதங்களாலோ எழுத் தாலோ செயல்படுத்தப்படும் கொடூரங்க ளின், ஒரே.லட்சியத்தை நோக்கி பயணிக் கின்றவர்களிடையே தோன்றும் அநீதியான உணர்வுகளின் மரண ஒலியாக அமையும் என்று திட்டவட்டமாக நம்புகிறேன்"
ஸ்ரீமத் பகவத்கீதையில் கிருஷ்ணர் அளித்துள்ள உறுதிமொழி : "எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு குந்தகமும், அதர்மத்துக்கு எழுச்சியும் உண்டாகிறதோ. அப்பொழுதெல்லாம் நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன். நல்ல வர்களைக் காப்பதற்காகவும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும், ஒவ்வொரு யுகத்திலும் நான் அவ தரிப்பேன்!" கீதை உபதேசிக்கும் பாரத சனாதன தர்மத்தின் சாராம்சத்தை முழுமையாக உள்வாங்கிய சுவாமி விவேகானந்தரின் அருள்மொழி "நான் இறந்துவிட்டால், விவேகானந்தர்களே இல்லாமல் போய்விடுவார்கள் என்று நினைக்காதீர்கள் உலகத்துக்கு தேவை என்றால், விவேகானந்தர்களுக்குப் பஞ்சமே இருக்காது. ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விவேகானந்தர்கள் தோன்றுவார்கள்.