உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் ஆவணி திருவிழா துவக்கம்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் ஆவணி திருவிழா துவக்கம்

ஆழ்வார்திருநகரி; நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் ஆவணி பெருந்திரு விழா நேற்று காலை10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.  அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தை, தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, தீபாராதணை நடந்தது. கொடிப்பட்டம் மாடவீதியில் சுற்றி வந்து கொடியேற்றம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோயில் ஸ்தலத்தார் சடகோபன் சுவாமிகள், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி, திருக்கோளூர் ஊர்த்தலைவர் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.  திருவிழா காலங்களில் தினமும் காலையில் ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் பல்லக்கில் மாடவீதி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் 9ம் திருவிழா அன்று காலைசுவமாமி ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் சுவாமி நம்மாழ்வாரை எதிர் கொண்டழைத்து மங்ளாசாசனம் நடைபெறும். 5ம் திருவிழாவான வரும் 14ம் தேதி அன்று இரவில் கருடவாகனத்தில் வைத்தமாநிதி பெருமாளும், அன்னவாகனத்தில் மதுரகவி ஆழ்வாரும் எழுந்தருளி கருடசேவை நிகழ்ச்சி நடைபெறும். வரும் 19ம் தேதி காலை 6.50 மணிக்கு மேல் சுவாமி கோயில் எழுந்தருளி 7.20 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 11ம் திருவிழா அன்று பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்வாரிக்கு எழுந்தருளல், இரவு திருவாய்மொழி சாற்று முறை, வெட்டிவேர் சப்பரத்தில் வைத்தமாநிதிப் பெருமாள் தாயாருடன் மதுரகவி ஆழ்வாருடன் வீதி புறப்பாடு நடைபெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் அஜித் மற்றும் கோயில் ஸ்தலத்தார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !