உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை டவுன் ஈசான மடத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நெல்லை டவுன் ஈசான மடத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருநெல்வேலி: திருவாவடுதுறை ஆதீனம், நெல்லை டவுன், ஈசான மடத்தில் நடராஜர் பூஜைமடம், ஈசானத் தம்பிரான் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகவிழா நடந்தது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக ஈசானத் தம்பிரான் பெயரில் 8 ஈசான மடங்கள் உள்ளன. அவற்றில் தலைமையானது, நெல்லை டவுன் ஈசான மடம். அங்கு எழுந்தருளியுள்ள சிவகாமசுந்தரி சமேத ஞான மா நடராஜப்பெருமான் பூஜை மடம், விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், பால சாஸ்தா, நாகர் மற்றும் ஈசானத் தம்பிரான் சுவாமிகளுக்கு அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகவிழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாளில் குருமகா சந்நிதானம் எஜமான அனுக்ஞை, கணபதி பூஜை, புண்யாகவாசனம், பல்வேறு ஹோமங்கள், புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல், யாகசாலைபூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. 2ம் நாளான நேற்று புண்யாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, பூதசுத்தி, வேதிகார்ச்சனை, ஜபம், பூர்ணாகுதி தீபாராதனை, கடம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அனைத்து தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனைநடந்தது. திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள்கும்பாபிஷேகத்தை நடத்தினார். ஈசான கிளை மடத்தின் புதிய கட்டடத்தை அவர் திறந்து வைத்து அருளாசி வழங்கினார். வக்கீல் ராமகிருஷ்ணன், ராயல் ஆஸ்பத்திரி செய்யது இப்ராகிம், சொனா. வெங்கடாசலம், சைவ சித்தாந்தபயிற்சி அமைப்பாளர் முத்துக்குமாரசாமி, சைவ சிந்தாந்தபயிற்சி மைய அமைப்பாளர் கணேசன், பாளை., மைய அமைப்பாளர் அருணகிரி, ஆசிரியர் முருகலிங்கம், ஈசான மடதென் மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன், மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், மேலாளர் சங்கர நாராயணன், கண்காணிப்பாளர்கள் குருமூர்த்தி, சங்கர நாராயணன், சண்முகம், ஸ்ரீராம் உட்படபலர் பங்கேற்றனர். சிவனடியார்கள், சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !