ரூ.32 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு
ADDED :812 days ago
சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களுக்கு சொந்தமான, 32 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்டு சுவாதீனம் பெறப்பட்டது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக நகரப்பகுதியில், இரண்டு ஏக்கர், 72 சென்ட் நிலம் உள்ளது. அது தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பில் இருந்தது. மன்னார்குடி வட்டம், கோட்டூர், கொழுந்தீஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர், 89 சென்ட் புன்செய் நிலங்கள், 20 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. நாகப்பட்டினம் அறநிலையத்துறை மண்டல இணைக் கமிஷனர் குமரேசன் தலைமையில் காவல், வருவாய்துறை உதவியுடன் நிலங்கள் மீட்கப்பட்டு, கோவில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இவற்றின் மதிப்பு, 32 கோடி ரூபாய்.