வாகைகுளம் நாராயண சுவாமி கோவிலில் ஆவணி தேரோட்டம்
ADDED :810 days ago
அம்பாச முத்திரம்: அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் வாகைபதி நாராயண சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடத்தப்பட்டன. உச்சிப்படிப்பு, பணிவிடை
செய்யப்பட்டது. பால்குடம், சந்தன குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன் தினம் மாலை கோலாகலமாக நடந்தது. சிறப்பு பூஜைகளையடுத்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய நாராயண சுவாமி வீற்றிருந்தார். ஏராளமான மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இரவு 11:00 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வந்தார்.