உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவில் யானை ருக்குவுக்கு ரூ.49 லட்சத்தில் மணிமண்டபம்

திருவண்ணாமலை கோவில் யானை ருக்குவுக்கு ரூ.49 லட்சத்தில் மணிமண்டபம்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்குவுக்கு, 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மணி மண்டபம் கட்ட, மாவட்ட கலெக்டர் முருகேஷ் அடிக்கல் நாட்டினார்.  

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு கடந்த, 2018- மார்ச், 22-ல் அதிகாலையில், உடல்நலக்குறைவால் இறந்தது. கோவில் அருகிலேயே அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன், 7 வயதில் கோவிலுக்கு வந்த ருக்கு, 23 ஆண்டுகளாக ஆன்மிக பணியை செம்மையாக செய்து, 30-வது வயதில் மரணமடைந்தது. கோவில் வளாகம் அருகில், யானை ருக்கு அடக்கம் செய்த இடத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. அதன் கட்டுமான பணியை இன்று காலை பூமி பூ‍ஜை செய்து, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். இதில், கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !