/
கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் சாதுக்கள் ஊர்வலம்; சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு
ராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் சாதுக்கள் ஊர்வலம்; சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு
ADDED :870 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் சாதுக்கள் கங்கை நீருடன் ஊர்வலம் சென்று, சுவாமிக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர். 2022 ஜூனில் உத்தரகாண்ட் கங்கோத்திரியில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாதுக்கள் 3 பேர் படுத்து எழுந்தபடி செப்.,3ல் ராமேஸ்வரம் வந்தனர். இவர்களுடன் வந்த சாதுக்கள் புனித கங்கை நீரை கலசத்தில் காரில் எடுத்து வந்தனர். நேற்று உத்தரகாண்ட் சாதுக்கள் புனித கங்கை நீர் கலசத்தை ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, சன்னதி வழியாக ஊர்வலமாக வந்தனர். பின் கோயில் சன்னதியில் சுவாமிக்கு கோயில் குருக்கள் மூலம் கங்கை நீர் அபிஷேகம் செய்ததும், சாதுக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சாதுக்களுடன் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளிதரன் உடனிருந்தார்.