மயில் வாகனத்தில் வலம் வந்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர்
ADDED :1065 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. விநாயகர் கோயிலில் செப்.10ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. நான்காம் நாளில் மயில் வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடந்தது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக செப்.18ல் தேரோட்டம் நடைபெற்று, மறுநாள் சதுர்த்தியில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.