சதுரகிரியில் ஆவணி அமாவாசை வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED :1125 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு இன்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.