திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி விழா
திருக்கோவிலூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள இரட்டை விநாயகர் மற்றும் என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள ஜெய கணபதி, விஜய கணபதி இணைந்த இரட்டை விநாயகர் கோவிலில் காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் ஷோடசோபவுபச்சார தீபாரதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை, இரவு 9:00 மணிக்கு உற்சவருக்கு மூஷிக வாகனத்தில் தீபாராதனை நடந்தது. என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி வினாயகர் ஆலயத்தில் காலை 9:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு மகா அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், தீபாராதனை நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை, அர்ச்சனை, மேலக்கச்சேரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.