உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது

குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது

தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் வளாகத்தில் 12 அடி நீள ராஜநாகத்தை தீயணைப்பு படையினர் பிடித்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி அருகில் குற்றாலநாதர் சுவாமி கோயில் உள்ளது. நேற்று கோயில் வளாகத்தில் பாம்பு இருப்பது குறித்து ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் தங்களால் பாம்பை பிடிக்க முடியாது என கூறியதால் தீயணைப்பு துறையினர் மாவட்ட உதவி அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் குழுவினர் பிடித்தனர். அதனை குற்றாலம் மலைப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !