உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : கம்பம், உத்தமபாளையத்தில் சிலைகள் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : கம்பம், உத்தமபாளையத்தில் சிலைகள் ஆற்றில் கரைப்பு

கம்பம்: கம்பம், உத்தமபாளையம் நகரங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கில் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.

கம்பம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் ஒவ்வொரு ஊரிலும் வீதிக்கு வீதி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்று காலை கம்பத்தில் மெயின்ரோடு அரச மரம் அருகில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம துவங்கியது. டிராக்டர் வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றது. பழைய பஸ்ஸ்டாண்ட் ரோடு, வ. உ.சி. திடல், மெயின்ரோடு, நகராட்சி வீதி, நாட்டுக்கல், வடக்கு பட்டி வழியாக முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது.. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சசிக்குமார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. ஹிந்து எழுச்சி முன்னணியினரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினார்கள். உத்தமபாளையத்தில் ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா தலைமையில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. மெயின்ரோடு, வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி வழியாக முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !